கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் : யாத்ரீகர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தை சேர்ந்தவர்கள் பற்றிய தகவலை அறிந்து கொள்ள ஆர்.முருகன் என்பவரை, 977 98085006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் : யாத்ரீகர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு
x
நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ள தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த யாத்ரீகர்களின் நிலை பற்றி உறவினர்கள் அறிந்து கொள்ள வசதியாக வெளியுறவுத் துறை சார்பில், ஹாட் லைன் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழகத்தை சேர்ந்தவர்கள் பற்றிய தகவலை அறிந்து கொள்ள ஆர்.முருகன் என்பவரை, 977 98085006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேபோல், தெலுங்கு மொழி பேசுவார் பிந்தி நரேஷ் என்பவரை 977  9808082292 என்ற எண்ணிலும், மலையாள மொழி பேசுவார் ரஞ்சித் என்பவரை 977 9808500644 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டள்ளது.

கன்னட மொழி பேசுவார் யோகாநந்தா என்பவரை 977  9823672371 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறுமாறும் அறிவுறுத்தபப்ட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்