போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் திரைத்துறைக்கும் தொடர்பு..?

போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலுக்கும், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்
போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் திரைத்துறைக்கும் தொடர்பு..?
x
போலி பாஸ்போர்ட் தயாரித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரில், ஒருவரான பாலு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும், இந்த போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

வெளிநாடுகளுக்கு திரைப்படம் எடுக்க செல்லும் போது குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு 30 முதல் 40 பேரை இந்த நிறுவனங்கள் அயல்நாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும். இதற்காக கணிசமான தொகையை போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல் அந்த நிறுவனத்துக்கு கொடுத்து விடுவார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களின் பக்கம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் பார்வை திரும்பியுள்ளது. மேலும் இதில் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் நிலையில், விசாரணை எல்லையை விரிவுப்படுத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இதுவரை 12 இலங்கை பாஸ்போர்ட் உள்பட 800-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை அந்த கும்பல் தயாரித்துள்ளதாகவும், இதன் விலை நாடுகளுக்கு ஏற்ப 5 முதல் 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த கும்பலின் முக்கிய நபர்கள் பலர் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களை கைது செய்ய தீவிரமாக போலீசார் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்