சென்னை மண்ணடியைச் சேர்ந்த அஸ்லாம் என்ற இளைஞர் பெண் தேடி வந்த நிலையில் ஓட்டல் அதிபர் முகமது இப்ராகிம் மகளை பெண் கேட்டுள்ளார். ஆனால் அஸ்லாம் வெளிநாட்டில் வேலை செய்வதாக கூறிய தகவல் பொய் என தெரிந்ததால் முகமது இப்ராகிம் அவருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஸ்லாம் பெண்ணின் புகைப்படங்களை இணையதளத்தில் பரவ விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து இப்ராகிம், காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து இஸ்லாம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று பள்ளிவாசலுக்கு வந்த இப்ராகிமை, 4 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பி மற்றும் கட்டைகளால் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.
We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok