நீட் தேர்விலும் சாதிக்கும் தமிழக மாணவர்கள்

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ள நிலையில், மருத்துவ சேர்க்கைக்கான ‛கட்-ஆப்' மதிப்பெண் கணிசமாக உயரும் என கூறப்படுகிறது.
நீட் தேர்விலும் சாதிக்கும்  தமிழக மாணவர்கள்
x
நடப்பாண்டு நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 45 ஆயிரம் பேர் குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களை பெற்றது மட்டுமில்லாது, அதிக மதிப்பெண்களையும் வாங்கியுள்ளனர். இதையடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 2016- ல் 251 ஆக இருந்த கட்-ஆப் மதிப்பெண், தற்போது 345 ஆகவும்,  பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண், 311 -ல் இருந்து, 402 ஆகவும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

கட்ஆப் மதிப்பெண் குறித்த அதிகாரப்பூர்வ தகவல், இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியாகும் என கூறப்படும் நிலையில், அடுத்தாண்டு  கட்-ஆப் மதிப்பெண் மேலும் உயரலாம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்