"பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா?" - கருத்துகணிப்பை ஏற்க சசி தரூர் மறுப்பு

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்ற கருத்துக்கணிப்பை ஏற்க இயலாது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா? - கருத்துகணிப்பை ஏற்க சசி தரூர் மறுப்பு
x
அமெரிக்காவில் நடைபெற்ற இந்தோ-அமெரிக்க கருத்தரங்கில் பேசிய அவர், ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நம்ப முடியாது என்றார்.

அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே ஒன்றிரண்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இது இந்திய ஆண்களுக்கு அவமானகரமான ஒன்று  என்றார்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க இயலாது என்றும் சசி தரூர்  குறிபிட்டார். 

காவல்துறையில் அதிக பெண்கள்  என்ற பல புதிய மாற்றங்களால் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக மாறி வருவதையும் சசிதரூர்  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்