"பெண்ணை மிரட்டி பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம்"

கேரளாவில் தேவாலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்ததாக பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணை மிரட்டி பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம்
x
கேரளாவின் பத்தனதிட்டா மாவட்டத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள், பெண்ணிடம் இருந்து அவ்வப்போது பணத்தையும் பறித்து வந்துள்ளனர். துபாயில் வேலை செய்துவரும் பெண்ணின் கணவர், அனுப்பிய பணம் மாயமாகிவருவதை அறிந்து விசாரித்த போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெண் விளக்கியுள்ளார். இதனையடுத்து ஊர் திரும்பிய பெண்ணின் கணவர், காவல் நிலையத்தில் புகார் அளித்த‌தை தொடர்ந்து, 5 பாதிரியார்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்