போலி ஏ.டி.எம் அட்டை மூலம் மோசடி : வழக்கை சிபிஐக்கு மாற்ற வலுக்கும் கோரிக்கை

புதுச்சேரியில், போலி ஏடிஎம் அட்டை மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
போலி ஏ.டி.எம் அட்டை மூலம் மோசடி : வழக்கை சிபிஐக்கு மாற்ற வலுக்கும் கோரிக்கை
x
போலி ஏ.டி.எம் அட்டை மூலம் மோசடி : வழக்கை சிபிஐக்கு மாற்ற வலுக்கும் கோரிக்கை



புதுச்சேரியில், ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி அதன் மூலம், பாஸ்வேர்டை தெரிந்து கொண்டு, பின்னர் போலி ஏடிஎம் அட்டை மூலம் கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த சிலரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலாஜி மற்றும் விவேக் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடிக் கும்பலுக்கு சந்துருஜி என்பவன் தான் தலைவன் என தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாகியுள்ள சந்துருஜியை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, தனக்கும் ஏடிஎம் மோசடிக்கும் தொடர்பில்லை என குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சந்துருஜி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தான். போலி ஏடிஎம் அட்டை மூலம் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும்  சந்துருஜி, சுமார் 60 நாட்கள் ஆகியும் கைது செய்யப்படவில்லை என்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்