பாஸ்போர்ட் பெற புதிய செயலி அறிமுகம்

இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தும், சுலபமாக புதிய பாஸ்போர்ட்டை பெறும் வகையில், பாஸ்போர்ட் சேவா என்ற மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்போர்ட் பெற புதிய செயலி அறிமுகம்
x
டெல்லியில் நடைபெற்ற பாஸ்போர்ட் சேவை தின நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாஸ்போர்ட் சேவா என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய அவர்,  பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் இந்த செயலி அறிமுகம் பெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

இந்த செயலியை பயன்படுத்தி நாட்டின் எந்த பகுதியிலும் இருந்தாலும், இருக்கும் இடத்தில் இருந்தே கைபேசி மூலம் பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க முடியும் என்றும், வாடிக்கையாளர்  குறிப்பிடும் முகவரியில் காவல்துறையின் சரிபார்ப்பு முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும்  திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திருமண சான்றிதழ் தேவையில்லை என்றும், விவாகரத்து பெற்ற பெண்கள் முன்னாள் கணவர் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை எனவும் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்