ஜி.எஸ்.டி - ஒரு வருட பயணம் நிறைவு

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் மிக முக்கியமான மைல் கல்லாக கருதப்படும் ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தி, ஜூலை ஒன்றாம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.
ஜி.எஸ்.டி - ஒரு வருட பயணம் நிறைவு
x
நாடெங்கும் வசூலிக்கப்பட்டு வந்த, 17 வகையான மத்திய, மாநில வரிகள், ஒரே வரியாக உருவாக்கப்பட்டதே ஜி.எஸ்.டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி. மாநிலங்களின் எல்லைகளில் இருந்த சோதனைசாவடிகளை ஒழித்து, தடையற்ற வணிகத்தை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். 

பூஜ்ஜியம், 5, 12, 18, 28 என ஐந்து வரி விகிதங்களை அனைத்து மாநில உறுப்பினர்களை கொண்ட ஜி.எஸ்.டி கவுன்சில் தீர்மானிக்கிறது. 2017 ஜூலை முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான ஒன்பது மாதங்களில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி வசூல் 11 புள்ளி 9 சதவிகிதம் உயர்ந்து 8.2 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.  

ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு தமிழக அரசின் வரி வசூல் 12 புள்ளி 3 சதகிதம் அதிகரித்துள்ளது. 34 லட்சம் புதிய நிறுவனங்கள் ஜி.எஸ்.டி பதிவு எண்களை பெற்றதால், வரி கட்டும் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சோதனை சாவடிகள், ஒழிக்கப்பட்டதால், லாரி போக்குவரத்துக்கான நேரம் வெகுவாக குறைந்துள்ளது. சில பாதிப்புகள் இருந்தாலும், ஜி.எஸ்.டி மிக நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.



Next Story

மேலும் செய்திகள்