ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : மத்திய அரசு அனுமதி தேவையில்லை என தமிழக அரசு வாதம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட மத்திய அரசு அனுமதி பெறத் தேவையில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : மத்திய அரசு அனுமதி தேவையில்லை என தமிழக அரசு வாதம்
x
மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய அனுமதியை எதிர்த்து வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது மட்டும்தான் மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பதால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு மத்திய அமைப்பிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக மத்திய - மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்