தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்

சென்னை எழிலகம் வளாகத்தில் நடக்கும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்
x
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய மாற்றத்தையடுத்து 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பாக நடைபெறும் போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் எனவும், இல்லையெனில் காலவரையற்ற போராட்டத்தை தொடர்வோம் எனவும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்