தலையில் அம்மிக்கல் போட்டு கணவன் கொலை - மதுபோதையில் தகராறு செய்ததால் மனைவி ஆத்திரம்

காஞ்சிபுரம் அருகே கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்
தலையில் அம்மிக்கல் போட்டு கணவன் கொலை - மதுபோதையில் தகராறு செய்ததால் மனைவி ஆத்திரம்
x
ஓரிக்கை பகுதியை சேர்ந்த திருமுருகன் என்ற கூலி தொழிலாளியின் மனைவி சுந்தரி. இந்நிலையில், திருமுருகன் அவ்வப்போது தமது மனைவியிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றும் திருமுருகன் தகராறில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த சுந்தரி, தலையில் அம்மிக்கல்லை போட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே திருமுருகன், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், திருமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்