வங்கியில் இருந்து பணம் திருட மொபைல் நம்பர் போதும் ?

உங்களிடம் உள்ள பணத்தை திருட, வீட்டின் பூட்டை உடைத்து திருடும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது... இது டிஜிட்டல் யுகம், அதற்கு தகுந்தாற்போல், திருட்டுகளும் டிஜிட்டல் முறையில் நடக்கின்றன... உங்கள் மொபைல் எண்ணை வைத்து, உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட முடியும்.
வங்கியில் இருந்து பணம் திருட மொபைல் நம்பர் போதும் ?
x
உங்களிடம் உள்ள பணத்தை திருட, வீட்டின் பூட்டை உடைத்து திருடும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது... இது டிஜிட்டல் யுகம், அதற்கு தகுந்தாற்போல், திருட்டுகளும் டிஜிட்டல் முறையில் நடக்கின்றன... உங்கள் மொபைல் எண்ணை வைத்து, உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட முடியும்.

உங்களக்கு சம்பந்தமே இல்லாமல் பல மெசேஜ்கள் உங்கள் போனுக்கு வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்... அது இந்த வகை திருடர்கள் அனுப்புவதாக கூட இருக்கலாம்...  உங்கள் மொபைல் நம்பருக்கு, வரும் மெசேஜ்கள், மெயில்கள் மூலம் ட்ரோஜன் போன்ற வைரஸ்கள் அனுப்பப்பட்டு, நீங்கள் மொபைலில் வைத்திருக்கு தகவல், வங்கி பரிவர்த்தனை, இந்த சிம் எந்த முகவரியில் பதியப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் திருடப்படும்.

பின்னர், உங்கள் மொபைல் நம்பரின் தகவல்களை எடுத்து, போலியான சான்றுகளை தயார் செய்துகொண்டு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனதிற்கு சென்று, மொபைல் தொலைந்து விட்டது.. சிம்மை பிளாக் செய்து, புதிய சிம் வேண்டும் என்று விண்ணப்பித்து சிம் கார்டை பெற்று கொள்வார்கள்.

அப்போது உங்களிடம் உள்ள சிம் பிளாக் ஆகும், திருடர்களிடம் உள்ள சிம் ஆக்டிவேட் ஆகும்... உங்களுடைய வங்கி பரிவர்த்தனை OTP, தனிப்பட்ட தகவல்களை அனைத்தும் எடுத்து, வங்கியில் உள்ள பணத்தை திருடும் முறையும் இருக்கிறது.. 

இப்படி எல்லாம் நடக்குமா என்கிறீர்களா?  உண்மையில் மும்பையில் இது போல நடந்துள்ளது.. இந்தியாவில் மட்டுமல்ல, லண்டன் போன்ற நாடுகளிலும் இது நடந்திருக்கிறது... செல்போனுக்கு வரும் மெசேஜ்கள், மெயில்களை கனவமுடன் கையாள வேண்டிய நிலையில் இருக்கிறோம், இல்லை என்றால், மோசடி வலையில் சிக்கிவிடுவோம்.

Next Story

மேலும் செய்திகள்