செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதை

செங்கோட்டை- புனலூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 49 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதையை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதை
x
செங்கோட்டை - புனலூர் இடையிலான மீட்டர்கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  7 ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது.இந்த வழித்தடத்தில் 7 மலைகளை இணைக்கும் வகையில் 8 கண் பாலம்,  5 கண் பாலம், 3 கண் பாலம் அமைக்கப்பட்டது. மேலும், 3 மலைக்குகைகள் கொண்ட இப்பாதையை அகலப்படுத்தும் பணி ரயில்வே துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில், ரயில் பாதை பணி கடந்த மார்ச் மாதம் முழுமையாக நிறைவடைந்தது.இதையடுத்து, செங்கோட்டை- புனலூர் இடையிலான அகல ரயில் பாதையை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் பேசிய அவர் , பாலக்காடு - புனலூர் விரைவு ரயில், நெல்லை வரை விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.இந்த வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரம் இருமுறை ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

Next Story

மேலும் செய்திகள்