"வாஜ்பாய் அரசு போல மோடி அரசு செயல்படுகிறது" - நிர்மலா சீதாராமன் பேட்டி

"வாஜ்பாய் அரசு போல மோடி அரசு செயல்படுகிறது" - நிர்மலா சீதாராமன் பேட்டி மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு, பாஜக அரசின் திட்டமில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் அரசு போல மோடி அரசு செயல்படுகிறது - நிர்மலா சீதாராமன் பேட்டி
x
சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், வாஜ்பாய் அரசு எப்படி செயல்பட்டதோ, அதேபோல, மோடி அரசும் செயல்படுவதாக தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக வெளியாகும் புகாரில் உண்மையில்லை என்றும் கூறினார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் என்பது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதால், அதை தமிழக அரசு தான் கையாள வேண்டும் என்றும்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்