சென்னையில் 23 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

ரூ. 7 கோடி ரொக்கம் - 15 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னையில் 23 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
x
சென்னையில் டெக்ஸ்டைல்ஸ், நகைக்கடைகள் உள்பட 23 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காந்தி பிரதர்ஸ் என்ற குழுமத்திற்கு சொந்தமான இந்த இடங்களில் காலையில் துவங்கிய சோதனை, மாலையிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

 
சந்தோஷ். சாந்திலால் ஜெயின் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான நகை கடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மாலை 6 மணி நிலவரப்படி, கணக்கில் வராத 7 கோடி ரூபாயையும், 15 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்