வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க உதவும் செயலியை உருவாக்கிய இளம் பொறியாளர்

வாக்குச்சாவடிக்கு செல்லாமல் செல்போனை பயன்படுத்தி வாக்களிக்கும் வகையிலான ஒரு செயலி
வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க உதவும் செயலியை உருவாக்கிய இளம் பொறியாளர்
x
வாக்குச்சாவடிக்கு செல்லாமல் செல்போனை பயன்படுத்தி வாக்களிக்கும் வகையிலான ஒரு செயலியை சிவகாசியை  சேர்ந்த இளம் பொறியியல் பட்டதாரி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.

தேர்தல் காலங்களின் போது வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலருக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்படும். ஆனால் அவர்கள் இனி வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க வைக்க முடியும் என்கிறார் சிவகாசியை அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த குருசாமி என்ற இளைஞர். 

பொறியியல் படிப்பை முடித்து விட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இவருக்கு சிறுவயதில் இருந்தே அறிவியல் பாடங்களின் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருந்துள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக பல்வேறு  கண்டுபிடிப்புகளை அவ்வப்போது உருவாக்குவதில் தேர்ந்தவராகவே அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். 

இந்த நிலையில்  மக்களுக்கு உபயோகமான ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் வீட்டில் இருந்தபடி வாக்களிக்க உதவும் அப்ளிகேஷன் ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார்.  இதன் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவு சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் குருசாமி... 


(குருசாமி, செயலியை உருவாக்கிய இளைஞர்)

ஆன்ட்ராய்ட் செல்போன்கள் வைத்திருப்போர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் வாக்குச்சாவடிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே வாக்களிக்க முடியும். 

இந்த செயலியை பயன்படுத்துவதால் தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடக்க வாய்ப்பே இல்லை என்பதும் இவரது கருத்து. மேலும் தேர்தல் முடிவுகளையும் இந்த செயலியின் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் குருசாமி. இந்த செயலி குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் பெருமையாக சொல்கிறார் ..

இந்த செயலி பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவு சாத்தியம் என்பது குருசாமியின் கருத்தாக உள்ளது. தேர்தல் ஆணையம் இதனை அங்கீகரிக்குமா? விரைவில் பயன்பாட்டுக்கு வருமா? என்பதே அவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது... 




Next Story

மேலும் செய்திகள்