அனில் கபூர் விமானப்படை சீருடையை அவமதிப்பதா ? - நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விமானப்படை வலியுறுத்தல்

விமானப்படை ஆடையை அணிந்துகொண்டு நடிகர் அனில் கபூர் தகாத வார்த்தைகளை பேசும் வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
அனில் கபூர் விமானப்படை சீருடையை அவமதிப்பதா ? - நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விமானப்படை வலியுறுத்தல்
x
அனில் கபூர் மற்றும் அனுராக் காஷ்யப் நடித்துள்ள Ak vs Ak என்ற திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியில், இந்திய விமானப்படையின் சீருடையை அனில் கபூர் தவறான முறையில் அணிந்துள்ளதாக விமானப்படை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமானப்படை உடையுடன் சில தகாத வார்த்தைகள் பேசும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இந்திய விமானப்படை கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தகைய வார்த்தைகள் இந்திய விமானப்படையில் இருப்பவர்களின் நடத்தைக்கு உகந்தது அல்ல எனவும், சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்