கொரோனாவால் தலைவி பட‌ப்பிடிப்பு நிறுத்தி வைப்பு - உயர் நீதிமன்றத்தில் தலைவி படக்குழு விளக்கம்

ஜெயல‌லிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் தலைவி திரைப்படத்திற்கு தடை கோரி தீபா தொடர்ந்த வழக்கு ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
கொரோனாவால் தலைவி பட‌ப்பிடிப்பு நிறுத்தி வைப்பு - உயர் நீதிமன்றத்தில் தலைவி படக்குழு விளக்கம்
x
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிப்பல் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதேபோல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், குயின் என்ற இணையதள தொடரை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி,  படத்தையும், இணையதள தொடரையும் எடுக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு செய்திருந்தார். வழக்கு விசாரணையின் போது, தலைவி பட நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனாவால் , மூன்று மாதங்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வழக்கை அவசரமாக விசாரிக்க அவசியமில்லை எனத் தெரிவித்தார். தீபா தரப்பு வழக்கறிஞர், குயின் இணையதள தொடர் வெளியாகி விட்டதாகவும் அதில் சில அவதூறு காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்டார். இதையடுத்து,  , வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்