"ரஜினிக்கு சிறப்பு விருது" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
பதிவு : நவம்பர் 02, 2019, 01:44 PM
கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 20 ஆம் தேதி துவங்கி, 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இடம்பெற உள்ளன. மேலும், தமிழில், ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களும், மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, உயரே, கோலாம்பி உள்ளிட்ட படங்களும், இந்தியில் உரி, கல்லி பாய், சூப்பர் 30 உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளன. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இதனிடையே, தனக்கு விருது அறிவிப்பதற்காக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

554 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

402 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

189 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

75 views

பிற செய்திகள்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் : 1,000 பேர் கைது

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

0 views

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்

தமிழக வீராங்கனை இளவெனில் வாலறிவன் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

7 views

மறைமுக தேர்தல் : அரசாணையை ரத்து செய்ய கோரி முறையீடு

மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.

16 views

"ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல்" : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 views

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

வரும் 24ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

221 views

காதல் கணவருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த மாணவி

சேலம் கெங்கவல்லி அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.