அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து விபத்து

விழுப்புரம் அருகே பால் அபிஷேகம் செய்த போது, கட்அவுட் சரிந்து விழுந்த விபத்தில், அஜித் ரசிகர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.
x
திருக்கோவிலூரில் உள்ள திரையரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஜித்தின் கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்அவுட் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அஜித்தின் ரசிகர்கள் ஏழுமலை, ஸ்ரீதர், முத்தரசன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் காயம் அடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் திரையரங்கு வளாகம் சிறிது நேரம் பதற்றத்துடன் காணப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்