நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள் - தடியடி நடத்திய போலீசார்

ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
x
ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர். ரசிகர்கள், விமான பயணிகளை  வரவேற்க வந்தவர்கள் திரண்டதால், காரில் ஏற முடியாமல் அஜித் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். அவருடன் ரசிகர்களும் விமான நிலையத்திற்குள் வந்ததால் அவர்களை மத்திய தொழிற்படை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். பின்னர் விமான நிலையத்தின் மற்றொரு பகுதியில் அஜித் வெளியே வந்தபோது ரசிகர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து முண்டியடித்து சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து அஜித்தை காரில் எற்றி அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்