"விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதிக்கு சம்பள பாக்கி"

சம்பள பாக்கி வைக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதிக்கு சம்பள பாக்கி
x
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் நடித்த விஷால், விக்ரம் பிரபு மற்றும் விஜய் சேதுபதிக்கு, ஒப்புக்கொண்டபடி, சம்பளம் வழங்காமல், திரைப்படங்கள் வெளியானதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில், நடிகர்களின் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி கொண்டு  ஊதியம்  வழங்காமல்  படங்களை  தயாரிப்பு நிறுவனங்கள் திரையிடுவதாக தெரிவித்துள்ள நடிகர் சங்கம் விட்டுக் கொடுப்பதை பலவீனமாக எடுத்துக்கொண்டு, சம்பளத்தை தர மறுப்பது தொடர்பாக, நடிகர் சங்க நிர்வாக குழு கலந்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், இது போன்று செயல்படுபவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, நடிகர் சங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்