தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனு

நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கதிரேசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனு
x
நடிகர் தனுஷை மகன் என உரிமைக் கோரி கதிரேசன்- மீனாட்சி தம்பதி மதுரை மேலூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து கடந்த ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது  தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த  பிறப்பு சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை  ஆகிய ஆவணங்கள் போலியானது என மதுரை புதூர் காவல் நிலையம் மற்றும் காவல்துறை ஆணையரிடம் கடந்த ஆண்டு, கதிரேசன் புகார் அளித்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். 
  

Next Story

மேலும் செய்திகள்