அக்‌ஷய் குமார் பட இயக்குநர் மீது #MeToo புகார்

பாலியல் புகாரில் சிக்கிய இயக்குநரின் படத்தில் நடிக்க மாட்டேன் என அக்‌ஷய் குமார் கூறியதால் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் இருந்து சஜித்கான் விலகியுள்ளார்.
அக்‌ஷய் குமார் பட இயக்குநர் மீது #MeToo புகார்
x
* ஹவுஸ்புல் 4 படத்தின் இயக்குநர் சஜித்கான் மீது, நடிகை ரேச்சேல் மற்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் உள்பட பலர் பாலியல் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகை தனுஸ்ரீ த‌த்தாவால் பாலியல் குற்றம்சாட்டபட்ட நானாபடேகரும் நடித்து வருகிறார். 


* இந்நிலையில், ஹவுஸ்புல் 4 படத்தின் படபிடிப்பை நிறுத்துமாறு அக்‌ஷய் குமார் கோரிக்கை விடுத்திருந்தார். பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் நடிக்க விரும்பவில்லை என கூறிய அக்‌ஷய்குமார், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஹவுஸ்புல் 4 படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்-கும் அக்‌ஷய்குமாருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதன் எதிரொலியாக இயக்குனர் சஜித் கான், படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்