சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி...

சின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி...
x
சின்னத்திரை நடிகை நிலானியின் காதலரான காந்தி லலித்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிலானி, காந்தி லலித்குமாருக்கு ஏற்கனவே பல பெண்களிடம் தொடர்பு இருந்ததாகவும், அதனால் தான் அவரை விட்டு விலகியதாகவும்  கூறி இருந்தார்.  இந்த நிலையில் காந்தி லலித்குமாரின் சகோதரரான ரகு, நிலானி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிலானிக்காக காந்தி லலித்குமார் அதிகம் பணம் செலவழித்ததாகவும், நிலானியால் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்  தெரிவித்திருந்தார் .  இந்த நிலையில் நடிகை நிலானி தான் வசித்து வரும் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வீட்டில் இருந்த கொசு மருந்தை எடுத்து குடித்த அவர், கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். நடிகை நிலானி தற்கொலைக்கு முயற்சித்த  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்