"திரையுலகில் உள்ள மேலும் சிலரது பெயர்களை வெளியிடுவேன்" - நடிகை ஸ்ரீ ரெட்டி

தெலுங்கை தொடர்ந்து தமிழ் திரையுலகினர் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, மேலும் சிலரது பெயர்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
திரையுலகில் உள்ள  மேலும் சிலரது பெயர்களை வெளியிடுவேன் -  நடிகை ஸ்ரீ ரெட்டி
x
நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம். சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். நியாயம் கிடைப்பதற்கான முயற்சி எடுக்க அவர்கள் முன்வரவில்லை.

சினிமா துறை மட்டுமல்ல, 90 சதவீத பெண்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். சினிமாதுறையில், சின்ன சின்ன உடைகளை பெண்கள் அணிந்து நடிக்க வேண்டும் என்கிறார்கள். சினிமாவில் பெண்களை கவர்ச்சி பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள். பாலியல் ஆதாயத்தில்  மட்டுமே சிலர் கவனம் செலுத்துவது ஏன் என தெரியவில்லை. கதையில் கவனம் செலுத்தினால், படங்கள் நன்றாக ஓடும்.

கேள்வி - மேலும் யாருடைய பெயர்களையாவது வெளியிட நீங்கள் திட்டமிட்டிருக்கிறார்களா?

பதில்- ஆம், எனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்