ரஷியாவின் நடன கலைஞர்கள் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

இளையராஜாவுக்கு நடனம் ஆடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஷிய நடன கலைஞர்கள்
ரஷியாவின் நடன கலைஞர்கள் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து
x
இசை அமைப்பாளர் இளையராஜா தனது தனது 75 வது பிறந்த நாளை கடந்த சனிக்கிழமை கொண்டாடினார். இந்நிலையில் ரஷியாவிலிருந்து, சென்னை  வந்த, ரஷிய நடன கலைஞர்கள், வடபழனியிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரை போற்றும் வண்ணம் பல விதமான நடனங்களை ஆடி இளையராஜாவை மகிழ்வித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா இசையால் மட்டுமே வன்முறைகளை ஒழித்து உலகத்தை அமைதியான பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்