"மாணவிகளை தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது"- தலிபான்கள் உத்தரவால் பரபரப்பு
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் மாணவிகளை நுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது என தாலிபன்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வில் மாணவிகளை அனுமதிக்கக் கூடாது என பல்கலைக்கழகங்களுக்கு அந்நாட்டு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. முன்னதாக, ஒருநாள் முன்பாக, தொண்டு அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய, தாலிபன் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story