"அதிமுக இதை செய்திருக்க கூடாது"... "தமிழ்நாட்டின் வருங்காலம் இனி பாஜக தான்"- அமர்பிரசாத் ரெட்டி
- பாஜகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
- இந்நிலையில் இது குறித்து அமர்பிரசாத் தமது டிவிட்டர் பதிவில்,
- பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வரும் அதிமுக, விலகும் நிர்வாகிகளை அடுத்தடுத்து அரவணைத்து வருகிறது என புகார் கூறியுள்ளார்.
- கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்கக் கூடாது என்றும், அண்ணாமலை தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும் என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- கொங்கு மண்டலத்தின் கோட்டையாக கருதப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி, 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டியுள்ள அமர்பிரசாத் ரெட்டி, கோட்டையை கைப்பற்றுவதை இனி மறந்து விட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜக மட்டுமே என்றும் அமர்பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளார்.
Next Story