அமெரிக்காவில் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்தியா தரப்பு கடும் கண்டனம்
அமெரிக்காவில் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில்
அமெரிக்காவில் இண்டியானாவின் கிரீன்வுட்டில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு நான்காவது முறையாக தங்கள் கோயில் ஒன்று வெறுப்புணர்வு காரணமாக சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக கோகில நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலின் பலகை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், மத விரோத நடத்தைக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டில் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக கிரீன்வுட் மேயரும் இந்த சம்பவத்தை கண்டித்து கருத்து கூறியுள்ளார்.
Next Story
