கின்னஸ் சாதனை படைத்துள்ளார் 116 வயது ஜப்பான் பாட்டி

உலகின் வயதான மூதாட்டியாக 116 வயது ஜப்பான் பாட்டி தேர்வு
கின்னஸ் சாதனை படைத்துள்ளார் 116 வயது ஜப்பான் பாட்டி
Published on
உலகிலேயே வயதான மூதாட்டியாக ஜப்பானை சேர்ந்த 116 வயது பெண்மணி கேன் டனாகா, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான விழாவில் கின்னஸ் அமைப்பு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த 1903ஆம் ஆண்டில் பிறந்த இவர், அங்குள்ள புக்குவோக்காவில் ஆரோக்கியத்துடன் வசித்து வருகிறார், தினமும் காலை 6 மணிக்கே எழும் பழக்கம் கொண்ட இவர், கணிதத்திலும் ஆர்வம் கொண்டவராம். கின்னஸ் சான்றிதழ் உடன் வழங்கப்பட்ட சாக்லெட்டை சாப்பிட்டதுடன், ஒரே நாளில் 100 சாக்லெட் சாப்பிட ஆசை என்று கூறி அனைவரையும் வியக்க வைத்தார். இதற்கு முன்பாக உலகின் வயதான மூதாட்டியான ஜப்பானை சேர்ந்த சியோ மியாகோ 117ஆவது வயதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com