3 பேரின் DNA மூலம் பிறந்த 8 குழந்தைகள் - உலகே வியக்கும் அதிசய நிகழ்வு
குணப்படுத்த முடியாத மரபணு கோளாறுகளுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்க உதவும் வகையில் ஐவிஎஃப் முறையில் மூன்று பேரின் டிஎன்ஏவை பயன்படுத்தி 8 ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றெடுத்து புதிய சாதனை படைத்துள்ளனர், இங்கிலாந்து மருத்துவர்கள்.
அறிவியல் உலகில் புதிய புரட்சியாக பார்க்கப்படும் இந்த ஆய்வில் தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவை, தானமாக பெற்ற பெண்ணின் இரண்டாவது கருமுட்டையுடன் இணைப்பதன் மூலம் பரம்பரை நோய்களிலிருந்து குழந்தைகள் தப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் மைட்டோகாண்ட்ரியல் நோயினால் உறுப்புகள் செயலிழப்பது, இளம் வயதிலேயே மரணம், வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புக்கு குழந்தைகள் உள்ளாவது தடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Next Story
