உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய மக்கள்.. தமிழகம் வந்ததும் சொன்ன வார்த்தை

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய மக்கள்.. தமிழகம் வந்ததும் சொன்ன வார்த்தை
Published on

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களில், 13 பேர் தமிழகம் வந்தடைந்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 30 பேர் உத்தரகண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். இந்நிலையில், சுற்றுலா முடிந்து அவர்கள் திரும்பிய போது, அம்மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்டதால் தமிழகத்திற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் முதல் கட்டமாக 17 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, மீதமுள்ள 13 பேரும் ரயில் மூலம் இன்று சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சி வி கணேசன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் வரவேற்றனர்....

X

Thanthi TV
www.thanthitv.com