உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
Published on
உதகையில் 123- வது மலர் கண்காட்சி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. ஐந்து நாள் நடைபெற்ற மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில் நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மலர் அரங்கம், மலர் அலங்காரம், வீட்டு பூந்தோட்டம், அரசு பூந்தோட்டம் மற்றும் சிறந்த பூந்தோட்டங்களுக்கு பரிசுகளை வழங்கினார். சிறந்த விவசாயி விருது கிருஷ்ணப்பா என்பவருக்கும், சிறந்த பூங்தோட்ட விருது வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய ஆளுநர் காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com