அருள்வாக்கு சொன்ன பெண் - அரண்டு போய் பார்த்த ஊர் மக்கள்

x

திண்டிவனம் அருகே எண்டியூர் பெண் அருள்வாக்கு கூறிய இடத்தில் இருந்து சூலம் எடுக்கப்பட்ட வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது .

விழுப்புரம் மாவட்டம் எண்டியூர் கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணிற்கு அருள் வந்து ஊர் குளத்தில் முருகர் சிலை, வேல் இருப்பதாக ஊர் மக்கள் முன்னிலையில் கூறியுள்ளார். இதனையடுத்து புவனேஸ்வரி கூறிய இடத்தில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதில் 5 அம்புகளை கொண்ட சூலம் எடுக்கப்பட்டது. பள்ளம் தோண்டும் போது தண்ணீர் வந்ததால்

மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி மீண்டும் பள்ளம் தோண்டும் பணி நடக்க உள்ளது. குளத்தில் இருந்து சூலம் எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்