வேளாங்கண்ணியில் திடீர்பரபரப்பு
வேளாங்கண்ணியில் அரசு திட்ட விளக்க போஸ்டர் மீது, எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் கிழிக்கப்பட்டது. வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய அரசின் திட்ட விளக்க போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதன்மீது எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டினர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் காவல் நிலையத்தில் போஸ்டரை அகற்றுமாறு புகாரளித்தனர். இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி வரவேற்ப்பு போஸ்டர் கிழித்து அகற்றப்பட்டது. மேலும் அங்கு ஏராளமான அதிமுக, திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
