தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அருகே டி.மாணிக்கம்பட்டியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழைக்கு முன்பே குடிமராமத்து பணிகள் நிறைவடைந்த நீர்நிலைகள் தயாரக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com