ஓட்டபிடாரத்தில் போட்டியிட ஆர்வம் காட்டும் பிற மாவட்டத்தினர்

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளூர் நபர்களை விட வெளியூர் நபர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஓட்டபிடாரத்தில் போட்டியிட ஆர்வம் காட்டும் பிற மாவட்டத்தினர்
Published on
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளூர் நபர்களை விட வெளியூர் நபர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 19 ம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலின் நான்காம் நாளில் வேலூரை சேர்ந்த சுப்பிரமணியன், வளநாட்டை சேர்ந்த மாரியப்பன் உட்பட் மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ள 5 பேரில் மூன்று பேர் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com