தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் தேயிலை தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.
தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி
Published on

நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் தேயிலை தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. தொழிலாளர்கள் செல்லும் சாலையில் உலா வந்த அந்த கரடியை வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனர். கரடி நடமாட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த 5 கரடிகள்

இதேபோல் கோத்தகிரி பஜார் மற்றும் கன்னிகாதேவி நகர் பகுதியில் நேற்று

5 கரடிகள் சுற்றித்திரிந்தன.தகவலறிந்த வனத்துறையினர் கரடிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கரடிகள் புதருக்குள் மறைந்துவிட்டன. இதனையடுத்து பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளிவர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

X

Thanthi TV
www.thanthitv.com