தனியார் விடுதியில் இளைஞர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் விடுதியில் இளைஞர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை
Published on
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் ஒரு பெண்ணுடன் தங்கியுள்ளார். ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அந்த பெண் விடுதியை விட்டு தலைமறைவானார். விடுதி ஊழியர்கள் வந்து பார்த்தபோது ரமேஷ் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரமேஷுடன் வந்த பெண் யார் ?, ரமேஷுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன உறவு ?, என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com