லாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்

தருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின.
லாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்
Published on
தருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின. தொப்பூர் கணவாயில் இன்று அதிகாலை கொப்பரை தேங்காய் ஏற்றி வந்த லாரி, மலைப்பாதையில் ப்ரேக் பிடிக்காததால் பின்னால் வந்த வாகனங்கள் மீது மோதி திடீரென்று தீ பிடித்தது. மளமளவென பரவிய தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடினர். இதில் மூன்று லாரிகள் மற்றும் கார் தீயில் முற்றிலும் கருகி சேதமடைந்தன. கேஸ்டேங்கர் லாரியில் எரிபொருள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், விபத்துக்கு காரணமான ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com