வனப்பகுதிகளை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு தடை....

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கொடைக்கானலில் மூன்று நாட்களுக்கு வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
வனப்பகுதிகளை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு தடை....
Published on
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கொடைக்கானலில் மூன்று நாட்களுக்கு வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தளங்களை பார்வையிட நேற்று முதல் வனத்துறை தடைவிதித்திருந்தது. இந்தநிலையில் பைன் ஃபாரஸ்ட், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்படுவதாக கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால், சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com