

சென்னையில் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று, நாடு முழுவதும் சென்று பணியாற்ற இந்த மையங்கள் உதவும் என்றார். மேலும், 'டெட்' தேர்வு எழுதி காத்திருக்கும் 82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிறப்பு ஆசிரியர்களுக்கு 20 நாட்களுக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் 'திறன் தொடர்பான பயிற்சி' இணைக்கப்பட உள்ளதாகவும், பள்ளிக் கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாக கூறிய நடிகர் ரஜினிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் செங்கோட்டையன் கூறினார்.