Hosur Children Death | அக்கா கையை பிடிக்க ஆசையாக ஓடிவந்த 3 வயது குழந்தை கோர மரணம்
Hosur Children Death | அக்கா கையை பிடிக்க ஆசையாக ஓடிவந்த 3 வயது குழந்தை கோர மரணம்
ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் தனியார் பள்ளிப் பேருந்து சக்கரம் ஏறியதில், சிறுமி உடல் நசுங்கி இறந்ததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சீகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஷான் பாஷா. இவரது மூத்த மகள் அல்பியா தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி முடிந்த நிலையில், பள்ளி பேருந்திலிருந்து வீட்டின் முன் இறங்கியுள்ளார். அப்போது ஷான் பாஷாவின் 3 வயதான இளைய மகள் ஆஷியா, அக்காவை அழைத்துச் செல்ல ஆசையாக ஓடி வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் சக்கரம் சிறுமி ஆஷியாவின் மீது ஏறியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், அவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
