ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம் அருகே கட்டி முடித்து ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படவில்லை. இட நெருக்கடியால் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்த செய்தி தந்தி டிவியில் கடந்த மாதம் வெளியானது.

இந்நிலையில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட்டன. இதனால் இடநெருக்கடியின்றி மாணவ-மாணவிகள் வகுப்பறைகளில் அமர்ந்து பாடங்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கட்டடம் திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com