

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 690 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், 29 ஆயிரத்து 520 ரூபாயாக உள்ளது.
தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் விரைவில் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராம் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.