

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள்ஒதுக்கீடு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நடைமுறையை கொண்டு வருவதற்காக அனைத்து புள்ளி விபரங்களையும் தொகுத்து வழங்கி பரிசீலிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.