பாலம் திறப்பு நிகழ்ச்சி - கலந்து கொள்ளாத மதுரை மேயர்
மதுரையில் நடைபெற்ற பாலம் திறப்பு விழாவில், மேயர் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம், டிவிஎஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இந்த பாலத்தை திறந்து வைத்தார். இதில், தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டவர்கள் நேரில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், மாநகராட்சி மேயர் இந்திராணி விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். இது குறித்து மேயர் தரப்பில் கேள்வி எழுப்பிய போது, "உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்காக இரண்டு நாள் விடுப்பில் சென்றிருந்தேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
