சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, அ.தி.மு.க அரசு 37 ஆயிரம் கோடி செலவு செய்தும், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தீரவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்துங்கள் என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தி.மு.க ஆட்சி காலத்தைவிட அ.தி.மு.க ஆட்சியில் தான் 7 ஆயிரத்து 508 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவும் போது கூட, மக்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.